மூத்த கலைஞர் மட்டுநகர் வி. முத்தழகு காலமானார்
இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு இன்று காலை (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77. மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1970-71 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கினார்கள். மெல்லிசைப் பாடலின் பிதாமகனென ‘பரா’ என்றழைக்கப்பட்ட S. K. பரராஜசிங்கம் அவர்களால் இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடகராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் மெல்லிசைப் பாடகர் வி. முத்தழகு ஆவார்.
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகக் கடமை புரிந்த இவர் 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply