மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை கவலைக்கிடம் : சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், மக்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக மாறி வருவதாகவும் சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான வலயங்கள் நோக்கி தப்பிச் செல்லும் நோக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரையோரப் பகுதிகளில் காத்திருப்பதாகவும் ,பாதுகாப்பு வலயங்கள் நோக்கிச் செல்ல காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவர் போல் கெஸ்டல்லா தெரிவித்துள்ளார்.
ஆனால், புலிகள் தொடர்ந்தும் பொதுமக்களை யுத்தத்தில் மனித கேடயமாக பாவிப்பதாக குற்றஞ்சாட்டிய இராணுவத் தரப்பு அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply