கருணாநிதி அடுத்த மாதம் 2 நாள் பயணமாக திருவாரூர் செல்கிறார்

karunaதி.மு.க. தலைவர் கருணாநிதி அடுத்த மாதம் 20–ந்தேதி 2 நாள் பயணமாக திருவாரூர் செல்கிறார். அவரது சுற்றுப்பயணம் விவரம் வருமாறு:– 20–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 21–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு காட்டூர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை மற்றும் கலையரங்கம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கொரடாச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12–ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

அன்று காலை 11.30 மணிக்கு திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு வக்கிரா நல்லூர் ஊராட்சியில் அங்கன்வாடிக் கட்டிடத் திறப்பு விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply