தேர்தலின் பின்னர் வடபகுதியில் இடம்பெறும் முதலாவது மீளக்குடியமர்வு

vavuniyaஅண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது நேற்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்ட அகதி முகாமில் வசித்து வரும் 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் லைக்கா நிறுவனமே குடியிருப்பு ஒன்றை அமைக்க உள்ளதாக நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அமைக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் காணி என்று வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் குறித்த 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள லைக்கா கிராமத்திற்கான நினைவுத் தூபியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
லைக்கா கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய வீடுகளுக்கான அடிக்கல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸ்ஸநாயக்க லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை அல்லிராஜா ஆகியோரால் நாட்டப்பட்டன.
இந்த குறித்த நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொண்டார்.
கடந்த 25 வருட காலங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும், பூந்தோட்ட அகதி முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் விடுகளை அமைக்க லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply