மஹிந்தவுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி
முன்னாள் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் நிதி மோசடி சார்பான இரு வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்ததையடுத்து அவ்வழக்குகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. கிறேக்க முறிகள் முதலீடு, ஊழியர் சேமலாப நிதியை பங்குச் சந்தையில் முடக்கியமை தொடர்பிலான நிதி மோசடிகள் தொடர்பிலேயே மேற்படி இருவருக்கும் எதிராக இவ்வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிவான் கிஹான் பிலபிட்டிய இவ்வழக்குகளை தள்ளுபடி செய்வதாக இன்று அறிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply