இலங்கைக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம்: இராணுவ தலைமை
இலங்கையில் தற்பொழுது அமைதியான சூழல் நிலவினாலும், எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம், எனவே இலங்கை இராணுவம் எதற்கும் தயாரா இருக்க வேண்டும் என இராணுவ தலைமை தெரிவித்துள்ளது.இலங்கை தற்போது ஒரு அமைதியான நாடு என்றாலும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எப்பொழுதும் அச்சுறுத்தல் வரக்கூடிய சூழல் நிலவுவதன் காரணமாக, இலங்கை இராணுவத்தினருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமை உள்ளதாக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கை அமைதியான நாடுகளில் ஒன்றாக காணப்பட்டாலும், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றின் காரணமாக ,எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என, இராணுவ தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் ஆயுதப்படை எப்பொழுதும் தொழில் திறமையானது, தகுதி வாய்ந்தது மற்றும் எந்த நேரத்திலும், எந்தவித சவால்களுக்கும் தயாரானது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எனவும் இதன் போது கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply