ஐ.நா. அறிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு வெளியிடக்கூடாது :அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னர் அரசு தம்மை நியாயப்படுத்தி, அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசு கடந்த காலத்தை தைரியமாக எதிர்நோக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொம் மாலினோவ்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முழுமையான அளவிலும் நேர்மையாகவும் கடந்த கால பிரச்சினைகளை எதிர்கொள்ள இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடும்போது, அந்த அறிக்கை தொடர்பான தமது பக்க நியாயங்களை முன்வைத்து பாதுகாப்பு வழிமுறைகளை அரசு பின்பற்றக்கூடாது. மெய்யாகவே பிரச்சினைளை இலங்கை அரசு எதிர்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply