அம்பாறை மாவட்ட சகல பிரதேசங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி செய்யும்
முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவுள்ள அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சகல ஊருக்குமான அபிவிருத்திகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும். இனிவரும் காலம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஒரு பொற்காலமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் (27) விஜயம் செய்தார். அங்கு ஹரீஸ¤க்கு அப்பிரதேச மக்களால் வரவேற் பளிக்கப்பட்டது.
இதன்போது வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எனது வெற்றிக்கும் கட்சியின் வெற்றிக்கும் வாக்களித்த கட்சிப் போராளிகளுக்கும், மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றி களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸின் கைவசம் கிடைக்கவுள்ளது. இதற்கான வாக்குறுதியினை கட்சியின் தலைமை ஜனாதிபதியிடமும். பிரதமரிடமும் பெற்றுள்ளது.
இதனை பயன்படுத்தி எமது மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் அபிவிருத்திப் பணிகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் தலைமையுடன் இணைந்து நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
நடந்து முடிந்த தேர்தலில் அம்பாறை மாவட்டம் முஸ் லிம்களினதும், முஸ்லிம் காங் கிரஸினதும் மாவட்டம் என இந்நாட்டு பெரும்பான்மை அரசியல் தலை மைகளுக்கும், எமது மாவட்ட மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கும் எமது கட்சியினூடாக பெற்ற மூன்று பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தின் மூலம் மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளதையிட்டு மகிழ்ச்சிய டைகின்றேன். இதன் மூலம் கட்சி பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் எமது கட்சித் தலைமையினையும் பலப்படுத்தி யுள்ளோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply