புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள்:எஸ்.பி. திவாரத்ன
முல்லைத்தீவில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஆயிரம் மெற்றிக தொன் உணவுப் பnhரட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார். இந்தத் தொகை உணவுப் பொருட்கள் கடந்த வாரங்களுக்குள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல் மூலமே இந்த உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவுக்; கடலில் கப்பல் நங்கூரமிடப்பட்டு அங்கிருந்து சிறு படகுகள் மூலம் அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. பின்னர் இதே கப்பலில் முல்லைத்தீவிலிருந்து நோயாயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பெப்ரவரி மாதம் முதல் இம்மாதம் 16 ஆம் திகதிவரையில் 4116 நோயாளிகள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply