செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் பயிற்சி
செவ்வாய் கிரகம் செல்வோருக்கு தனி அறைக்குள் அடைத்து ‘நாசா’ மையம் பயிற்சி அளிக்கிறது. வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போன்ற சூழ்நிலையில் மனிதர்கள் வாழ பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக அமெரிக்காவில் ஹவாயில் உள்ள மவுனா லோவா எரிமலை பகுதியில் கூண்டு போன்ற பிரத்யேக அறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறை 20 அடி உயரம் மற்றும் 36 அடி அகலத்தில் உள்ளது.
இதற்கு ‘ஹி–சீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதில் 6 பேரை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழும் சூழ்நிலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் நிபுணர், அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, கட்டிட கலை நிபுணர், பத்திரிகையாளர், மண்ணியல் விஞ்ஞானி மற்றும் பிரான்சை சேர்ந்த நிபுணர் என 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் 6 பேரும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை இந்த அறையில் தங்குகின்றனர். எனவே, நேற்று இவர்களுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு அறைக்குள் சென்று தங்கினர்.
அங்கு தங்குபவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் தூங்குவதற்கு சிறிய கட்டிலும், உட்காருவதற்கு மேஜையுடன் கூடிய நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு அதிக சக்தி தரும் நெய் உள்ளிட்டவை உணவு பொருளாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2 குழுக்களை சேர்ந்தவர்கள் 4 மாதம் மற்றும் 8 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது தான் நீண்ட நாட்கள் பயிற்சி பெற 6 பேர் கொண்ட குழு கூண்டு அறைக்குள் சென்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply