துருக்கியில் முதன் முறையாக பெண் மந்திரி நியமனம்

trucyதுருக்கியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இருந்தாலும் அந்த நாடு மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. அங்கு வருகிற நவம்பர் 1–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தற்போது அக்மத் தவுதோக்லு தற்காலிக பிரதமராக பதவி வகிக்கிறார். அவரது அமைச்சரவையில் ஆய்சென் குர்கான் (52) என்ற பெண் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.துருக்கி வரலாற்றில் இதுவரை பெண் மந்திரி யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது இவர்தான் மந்திரி பதவி ஏற்றுள்ளார்.

இவருக்கு குடும்ப நலம் மற்றும் சமூக கொள்கை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 3 குழந்தைகளின் தாயான அவர் இளைஞர் மற்றும் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறார். இதன் செயல் தலைவராக அதிபர் ரீசெப் தய்யீப் எர் டோகனின் மகன் பிலால் எர் டோகன் பதவி வகிக்கிறார்.

சமீப காலமாக துருக்கி அரசு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி வருகிறது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதற்கான தடையை நீக்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply