ஐ.தே.கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் கோரிக்கை : ரணில் நிராகரிப்பு

தனியான அரசாங்கம் அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். தேசிய ranilஅரசாங்கமொன்றை அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சி தனியாக அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அதுகோரல, மங்கள சமரவீர, ருவான் விஜேவர்தன, ஹர்ச டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் இரான் விக்ரமரட்ன ஆகியோர் அண்மையில் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply