இஸ்ரேல் ராணுவ வீரரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் போராடிய சிறுவன்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மேற்குக்கரையில், இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து சிறுவன் ஒருவன் துணிச்சலாக போராடிய காட்சியும் அந்த சிறுவனை இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்தும் காட்சிகளும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மேற்குக் கரை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இஸ்ரேல் நாட்டவர்களின் குடியேற்றத்தைக் கண்டித்தும் ராணுவ குவிப்பைக் கண்டித்தும் அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு மேற்கு கரையில் உள்ள நபி சாலே பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தனது குடும்பத்துடன் சிறுவன் ஒருவனும் கலந்து கொண்டான். இஸ்ரேல் ராணுவம் மேற்குக்கரையில் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக ஆவேசமாகக் கோஷமிட்டவாறு ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டான்.
அப்போது அந்த சிறுவனை பிடித்து இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் அடக்கு முறையில் ஈடுபடும் காட்சியும் அதனையும் பொருட்படுத்தாமல் ராணுவத்திற்கு எதிராக அந்த சிறுவனும் கிராமத்தினரும் போராடும் காட்சியும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply