எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் : தினேஸ் குணவர்தன
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணிக்கே வழங்கப்பட வேண்டுமென மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே, ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தள்ளது.
சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் எதிர்க்கட்சியில் இருக்கத் தீர்மானித்துள்ளன. ரணில் விக்ரமசிங்க நஞ்சு அருந்த வேண்டுமென தேர்தல் காலத்தில் கூறியவரே (டிலான் பெரேரா) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழஙக்ப்பட வேண்டுமென கூறி வருகின்றார். வேறு யாரும் அவ்வாறு கோரவில்லை. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட அனைவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவில்லை.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பார்கள். இதற்கு முன்னர் சபாநாயகர் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய எதிர்க்கட்சித் தலைமைப் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply