நாளைய புதிய பாராளுமன்றில் ஆர்.சம்பந்தனே எதிர்கட்சித் தலைவர்!

sampanthanநாளை 1ம் திகதி கூடவுள்ள 8வது புதிய பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சித் தலைவரை எதிர்கட்சிகளே நியமிக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன இன்று  கூறியது அதன் காரணமாகவே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த கருத்தை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மஹிந்தவாதிகளுக்கு விரும்பியவாறு எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்துகொள்ள ஜனாதிபதி இணங்கியுள்ளதாகவே பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.

நாளை கூடவுள்ள பாராளுமன்றில் உண்மையான எதிர்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆகும். அதில் அதிக பாராளுமன்ற ஆசனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதால் எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்துகொள்ளும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு.

உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் செல்லும் கடினமான பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சித் தலைவர் பதவியை பெறுவது மிகவும் ஊசிதமானதென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply