கொழும்பில் இன்று சர்வதேச பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்
இராணுவத்தின் சர்வதேச பாதுகாப்பு மாநாடு (கோல்ட் டயலொக் மிஒல்னீ ளிஇலொக்) இன்று கொழும்பில் வெளிநாடுகளின் இராணுவ, புலனாய்வு அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பமாகிறது. இரண்டு தினங்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கடல் சார் இயற்கை அனர்த்தங்கள், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. மாநாட்டின் பிரதான உரை ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி நிகழ்த்தவுள்ளார். அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, மலேசியா, இந்தோனேஷியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், நிபுணர்கள், பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவுற்ற (2009) பின்னர் இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாடுகள் புரிந்து கொள்ள இம்மாநாடு வழி கோலுவதுடன் இலங்கை இராணுவத்தின் நன்மதிப்பு ஒழுக்கம் என்பவற்றைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் போரில் முறைகள் முறியடிப்பு தாக்குதல் பதுங்கியிருந்து தாக்குதல் குறித்த இலங்கையின் அனுபவங்களையும் வெளிநாடுகளின் அறிவுரைகளையும் பகிர்ந்து கொள்ளும் மாநாடாகவும் இது கருதப்படுகிறது.
இருநாள் மாநாடு நிறைவடைந்ததும் இம்மாதம் 03 ஆம் திகதி முதல் 23ம் திகதி வரை தாக்குதல் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் இப்பயிங்சிகள் இடம்பெறும்.
போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல் சட்டவிரோத புகலிடக் காரர்களின் ஆபத்தான கடற் பிரயாணம், பயங்கர வாதிகளின் சர்வதேச போக்குவரத்து, தொடர்பாடல், வலையமைப்பு என்பன பிராந்திய, சர்வதேச பாதுகாப்புக்குப் பெரும் சவாலாகியுள்ள இக்காலத்தில் இவற்றை தோற்கடிப்பதற்கான யுக்திகள், உபாயங்களையும் இந்த இருநாள் பாதுகாப்பு மாநாடு கருத்தில் கொள்ள வுள்ளது.
உலக அமைதிக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு பற்றியும் கவனம் செலுத்தப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply