இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் : ஞானசார தேரர்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க ஆட்சியில் கடந்த 2001ம் ஆண்டு மிலேனியம் சிட்டி சம்பவத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவினர் காட்டிக் gnanasaraகொடுக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் புலனாய்வுப் பிரிவு பாரியளவில் வீழ்ச்சி அடையவும், அதிக எண்ணிக்கையிலான புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கொலை செய்யப்படவும் காரணமாகியது. புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதனால் எதிர்கால தேசியப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.

தமிழ்ப் பிரிவினைவாதம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படாத நிலையில், இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்கும் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. சில வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் இலக்கு வைக்கப்படுகின்றனர். புலனாய்வுப் பிரிவினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply