கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

kottaமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, dumindaமேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் இவர்­க­ளுக்கு பாரிய ஊழல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மேஜர் ஜென­ரல்­க­ளான பாலித்த பிர­னாந்து, கே.பீ.கொட­வெல, எம்.ஆர்.டப்ள்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளான உபாலி கொடி­கார, துமிந்த சில்வா, தன­சிறி அம­ர­துங்க, ஜனக ரத்­நா­யக்க ஆகி­யோ­ரே இவ்­வாறு அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் 550 பேரை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்காக ஈடு­ப­டுத்­தி­யமை, தேர்­தலின் போது அந் நிறு­வ­னத்தின் பணம் 86 லட்சம் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் இந் நபர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ரக்ன லங்கா நிறுவ­னத்தில் வேலை பார்த்த 550 பேர் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்டு அந்த வெற்­றி­டத்­துக்கு சிவில் பாது­காப்பு வீரர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையும் அகற்­றப்­பட்­ட­வர்கள் தேர்தல் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ரக்ன லங்கா நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அமைப்­பா­ளர்கள் ஊடாக கோட்டை, கொலன்­னாவை, தெஹி­வளை, கடு­வெல, மஹ­ர­கம ஆகிய பிர­தே­சங்­களின் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஈடு­ப­டுத்தியமை, ஊழி­யர்­களின் வெற்­றி­டங்­க­ளுக்கு இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட சிவில் பாது­காப்பு படை­யி­னரை பயன்­ப­டுத்­தி­ய­மை, அவர்­க­ளுக்கு ரக்ன லங்கா சீருடை வழங்­கப்­பட்­ட­மை, அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான ஆயு­தங்­களை உரிமை பத்­தி­ர­மின்றி களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இந்த 9 பேரி­டமும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு 800 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்ள நிலையில் விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முறைப்­பாடு இது­வென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply