சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானால் தமிழர்களுக்காக மட்டும் பேச முடியாது : சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கையில் இருந்து மாறிச் செல்கின்றதா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற sureshஉறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் முன்மொழிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல வழி மொழிந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினரான செல்வம் அடைக் கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக முன் மொழிய உள்ள விடயம் ஏனைய பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பி னர்களுக்கு தெரியாது.

என்ன காரணத்திற்காக அவ்வாறு ரகசியமான முறையில் இந்த விடயம் கையாளப்பட்டது என தெரியாது.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எதிர்தரப்பில் இருந்து ஆளும் தரப்புக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார் அதன் பொருள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்பட போகின்றதா? அவ்வாறு அவர் அழைத்து செல்லப்பட்டதன் பொருள் என்ன என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தெரியப்படுத்த வேண்டும்.

இதேவேளை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய் யப்படுவார் என நம்பகமான தெரிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் அதன் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட உள்ளார்.

எனவே இந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக செயற்பட போகின்றதா இல்லை எதிர் தரப்பாக செயற்பட போகின்றதா என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவு படுத்த வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்படுவாராயின் அவர் தனியே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையை மாத்திரம் கதைக்க முடியாது ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பிரச்சினை தொடர்பில் கதைக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்படுவாராயின் தற்போது உள்ளதை விட சர்வதேச நாடுகளுடனான நெருக்கம் அதிகரிக்கும் அதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம் ஆனால் இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு அவர் பயன்படுத்த போகின்றார் என தெரியவில்லை என மேலும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply