வீரவங்ச ஆவேசம் : பாராளுமன்றத்தில் பதற்றம்
எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் ஆவேசமான தர்க்கத்தினால் பாராளுமன்றின் இன்றைய காலை அமர்வில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தனை அப்பதவிக்கு நியமிப்பதை தான் கடுமையாக எதிர்ப்பதாக விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலையீட்டில் விமல் பின்னர் ஆசுவாசமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டுமன்றி, இன்றைய காலை அமர்வின்போது, மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக்குவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த மஹிந்த அணியினர், இது தொடர்பில் பாராளுமன்ற விவாதமொன்று தேவை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்படியாயின் மத்தள விமான நிலைய நிர்மாணம் தொடர்பிலும் விவாதிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றமான நிலைமையோடு பாராளுமன்றம் 10 நிமிடமளவு ஒத்திவைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply