தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை எதிர்க்கட்சித் தலைவர : சம்பந்தன்
தமிழ் மக்களின் நீண்டகால தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளுடனும் இணைந்து செயற்பட விருப்பதாகவும் அவர் கூறினார். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கைவைத்து வாக்களித்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே தமது பிரதான கடமையென்றும் அதனை நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.
எனக்கு வழங்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தேசிய நலன் கருதி அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களை தேவையான இடங்களில் எதிர்ப்பதற்கும், தேவையான இடங்களில் ஆதரவு வழங்குவதற்கும் தயாராக இருக்கின் றோம்.
அது மாத்திரமன்றி எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளுடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவோம். எதிர்க்கட்சியிலுள்ள சகலருடனும் இணைந்து செயற்திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கப்ப டுவதை எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் போது அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரிக்கும் கலாசாரமொன்றே இலங் கையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே நாட்டுக்கு நன்மை பயக்கும். அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அயல்நாடான இந்தியாவில் 27 கபினட் அமைச்சுக்களும், 13 சுயாதீனமாகச் செயற்படக்கூடிய இராஜாங்க அமைச்சர் களும், 25 மாநில அமைச்சர்களுமே உள்ளனர். சனத்தொகை கூடுதலான இந்தியாவில் குறைந்த அமைச்சரவை இருக்கும் நிலையில் இலங்கையின் அமைச்சரவை அதிகரிக்கப்படும் கலா சாரம் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
மாகாணங்களில் துடிப்புள்ள இளம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களுக்குப் போதியளவு அதிகாரங் களை வழங்கி மாகாணங்களைக் கட்டியெழுப்பு வதற்கான திட்டங்களைத் தயாரிப்பது அவசியமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply