உலகை உலுக்கிய குழந்தையின் புகைப்படம் : உதவிக்கரம் நீட்டும் பிரபல ஜெர்மனி கால்பந்து அணி
மத்திய தரைகடலில் மூழ்கி இறந்து போன ஆய்லனின் படம் வெளியாகி உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் கால்பந்து ரசிகர்கள், அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன், ரசிகர்கள் போட்டியை காண வருகின்றனர்.
இந்த புகைப்படம் வெளியான அடுத்த நாளே, ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச், ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.
ஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி பேயர்ன்மியூனிச் அணி, எப்.சி. ஆக்ஸ்பர்க் அணியுடன் மோதுகிறது. மியூனிச் நகரின் ஏலியன்ஸ் அரானவில் நடைபெறும் இந்த போட்டியின் போது, அயலான் இறப்பை நினைவு கூறும் வகையில், ஜெர்மனி நாட்டு குழந்தைகளுடன், அகதிகளின் குழந்தைகளையும் வீரர்கள் மைதானத்திற்குள் அழைத்து வர உள்ளனர். அகதிகளையும், அவர்களின் குழந்தைகளையும் அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply