ஜெர்மனிக்கு 10 ஆயிரம் பேர் வருகை: அகதிகளை வரவேற்று ஐரோப்பிய நகரங்களில் மக்கள் பேரணி
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர். அதுபோன்று பிரச்சினைக்குரிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் வெளியேறுபவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். அவர்களை ஏற்க ஹங்கேரி, இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் மூழ்கி இறந்த அய்லான்குர்தி என்ற 2 வயது சிறுவனின் போட்டோ உலகையை உலுக்கிறது. அதைத் தொடர்ந்து ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும் அகதிகளை வரவேற்றுள்ளன.
10 ஆயிரம் அகதிகள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு வந்தனர். அவர்களை வரவேற்று வேண்டிய உதவிகள் செய்து தரப்பட்டன.
அங்கு மொத்தம் 40 ஆயிரம் அகதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அகதிகளாக வருபவர்களின் பாதுகாப்புக்கு ஜெர்மனி 4 ஆயிரம் ராணுவ வீரர்களை நியமித்துள்ளது.
இதற்கிடையே அகதிகளை வரவேற்று நேற்று ஐரோப்பிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. லண்டனில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர். பிரதமர் இல்ல அலுவலகம் உள்ள டவுனில் ரோடு நோக்கி இப்பேரணி புறப்பட்டு சென்றது.
அகதிகளுக்காக எல்லையை திறந்து விடுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். அதே போன்று இங்கிலாந்தின் பல நகரங்களில் பேரணி நடத்தப்பட்டன.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோபில் நடந்த பேரணியில் 1000 பேர் பங்கேற்றனர். டென்மார்க் தலைநகர் கோபின்கேகனில் பாராளுமன்றத்துக்கு பேரணியாக சென்றனர். அதில் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஆதரவு பேரணி நடைபெற்றது.
அதே நேரத்தில் அகதிகளுக்கு எதிராகவும் ஆங்காங்கே பேரணிகள் நடந்தன. போலந்து தலைநகர் வார்ஷாவில் 5 ஆயிரம் பேர் எதிர்த்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
செக் குடியரசு நாட்டில் தலைநகர் பிராகுவேயில் 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அகதிகளை ஆதரித்தும் பேரணி நடத்தப்பட்டது. சுலோ வாகியா தலைநகர் பிரேடிஸ் லாவாவில் எதிர்ப்பு பேரணி நடந்தது. அதில் 1500 பேர் பங்கேற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply