அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பின அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பின அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கேய்னும் பேட்டியிட்டனர்.

297 தொகுதிகளைப் பெற்று பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜோன் மெக்கேய்னுக்கு 139 தொகுதிகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

முன்னொரு போதும் இல்லாதளவு இம்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவானவர்கள் வாக்களித்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 233 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முதன் முறையாக கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷின் பதவிக்காலம் 2009ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைவதுடன், ஒபாமா ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply