1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் – பணக்காரர்களின் நாடாக மாறிவரும் இந்தியா

இந்தியாவில் 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக  உலகச் செல்வ(2015) அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேப்ஜெமினி மற்றும் monyஆர்.பி.சி. வெல்த் மேனேஜ்மெண்ட் வெளியிட்ட உலகச் செல்வ(2015) அறிக்கையின்படி இந்தியாவில் 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதன் மூலம் உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இது 2014-ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புள்ளி விபரம் ஆகும்.

 

மேலும் ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 1.56 லட்சமாக இருந்தது.

 

சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவதும், பொருளாதார சீர்திருத்ததில் நம்பிக்கையுள்ள பிரதமரால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதும் பங்கு சந்தை உயர்வும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

மேலும் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 43.51 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பான் நாட்டில் சுமார் 24.52 லட்சம் பேரும், 3வது இடத்தில் உள்ள ஜெர்மனியில் சுமார் 11.41 லட்சம் பேரும், 4வது இடத்தில் உள்ள சீனாவில் சுமார் 8.9 லட்சம் பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply