இந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா, சிங்கப்பூரில் வேகமாக பரவும் மாசடைந்த காற்று
இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி எரிப்பதால் ஏற்பட்ட காட்டுத் தீயால் மலேசியா, சிங்கப்பூரில் வேகமாக மாசடைந்த காற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் வீதிகளில் கடினமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவேண்டாமென்று, கவனமாக பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல இடங்களில் புகையுடன் கூடிய பனி பொழிவும் ஏற்பட்டு வருகிறது. இதே போல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
முக்கியமாக சிங்கப்பூரில் பரவும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. காற்று மாசானது அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் உள்ளது. தொடர்ந்து இதே அதிகரித்தால் கடும் உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியா அரசு, காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை பயன்படுத்தியிருக்கிறது. மேலும் சுமத்ரா பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply