இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை தமிழக சட்ட சபையில் ஜெயலலிதா தீர்மானம்

இலங்கை இனப்படுகொலை சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா jeyalaithaதீர்மானம் தாக்கல் செய்தார். இலங்கை இறுதி போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று அறிக்கை தாக்கலாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.

சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தனி தீர்மானத்தில் “இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்” என தீர்மானத்தை முன் மொழிந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply