ஜெனீவா பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும் : தயான் ஜயதிலக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கைப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டுமென முன்னாள் சிரேஸ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நீதவான்களைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை நடத்துவது நாட்டின் ஜனநாயகத்தை பாரியளவில் மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வித்தியாசமானது எனவும், உலகில் வேறு எந்த நாட்டுக்கும் செய்யப்படாத பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் இயலுமை அரசாங்கத்திற்கு இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் போன்று சர்வதேச நீதவான்களைக் கொண்டு வழக்கு விசாரணை செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இவ்வாறு வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு இலங்கையில் விசாரணை நடத்தினால் அது, நாட்டின் இறைமையை மோசமாக பாதிக்கும் எனவும். வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஆற்றிய உரையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக மங்கள சமரவீர உறுதியளித்துள்ளதாகவும் இவ்வாறு செய்வதன் மூலம் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய நேரிடும் எனவும் தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply