சூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 100 பேர் பலி

c5c-09074889211c_S_secvpfசூடான் நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு மேற்கே கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற ஒரு டேங்கர் லாரி திடீரென சாலையை விட்டுவிலகி கவிழ்ந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை பிடிக்க அந்த பகுதி மக்கள் திரண்டனர். அந்த நேரத்தில் திடீரென லாரி வெடித்து சிதறியது. இதில் அங்கு திரண்டிருந்த 100 பேர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

 

இந்த விபத்து குறித்து ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘மேற்கு ஈகோட்ரியா என்ற இடத்தில் இருந்து தெற்கு சூடானுக்கு சாலை வழியாக நீண்ட நேரம் சென்ற ஆயில் டேங்கர் லாரி திடீரென சாலையை விட்டு விலகி மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மக்கள் 100 பேர் பலியானார்கள். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply