சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் பேட்டி
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் 2011–ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அந்த தீர்மானத்தை கண்டுகொள்ளவில்லை.காலத்தின் தேவையை உணர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சரியான நேரத்தில் மீண்டும் அந்த தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். இந்த தீர்மானத்தை தேர்தலுக்காக போடப்பட்ட தீர்மானம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மனித உரிமையின் ஆணையர் இலங்கையை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கூறுகிறார். இதனால் முழுமையான நீதி, நேர்மையான விசாரணை கிடைக்க வாய்ப்பில்லை.
இலங்கையை தவிர்த்து பன்னாட்டு விசாரணையை நடத்த வேண்டும். சர்வதேச விசாரணை அமைப்பில் இலங்கையை சேர்க்கக்கூடாது.நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களை அறிவித்து விடுவோம். அதற்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது.ராமநாதபுரம் தொகுதியில் குழந்தைகள் நல மருத்துவர் களஞ்சியம் சிவக்குமரன், திருவாடாணையில் அறிவுச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அச்சுறுத்தலுக்கு அடி பணியாத மற்ற கட்சிகளுக்கு விலை போகாத வேட்பாளர்களை அறிவிப்போம்.எங்களது இலக்கு வெற்றி தோல்வி கிடையாது. பண நாயகத்தை ஒழிக்க வேண்டும். இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு என்பது வழக்கமான சடங்காகவே இருந்துள்ளதே தவிர எவ்வித பலனும் கிடையாது. இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து மிரட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply