சவுதி அரேபியாவில் மெக்கா ஓட்டலில் தீ விபத்து: 1000 ஆசிய ஹஜ் யாத்ரீகர்கள் வெளியேற்றம்
இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ யாத்திரை கடந்த 15–ந்தேதி தொடங்கியது. எனவே இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மெக்கா நகருக்கு சென்று அங்குள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் மெக்கா அருகேயுள்ள கஷிஸியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஓட்டலின் 8–வது மாடியில் பயணிகள் தங்யிருந்த அறைக்கு வெளியே தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஓட்டலில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்கியுள்ளனர். எனவே, அங்கிருந்து 1000–க்கும் மேற்பட்ட ஆசிய ஹஜ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் 11–ந்தேதி மெக்கா பெரிய மசூதியில் கிரேன் அறுந்து விழுந்து கட்டிடம் இடிந்ததில் 107 பேர் பலியாகினர். அவர்களுக்கு தலா 3 லட்சம் ரியால் உதவித்தொகை வழங்குவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply