செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை விஜயம்?

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் இலங்­கைக்கு விஜயம் செய் வார். ஐ.நா.மனித uno huseinஉரிமை ஆணை­யா­ள­ருக்கு இலங்­கையின் சார்பில் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனை இலங்­கைக்கு விஜயம் செய்­யு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. பெரும்­பாலும் அவர் அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜ­யத்­தின்­போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்பில் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டப்­படும். அது மட்­டு­மன்றி சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த அமைப் புக்கள் இங்கு வந்து நிலைமையை பார்க் கலாம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply