மூன்று புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க அரசு தீர்மானம் !

பாதுகாப்புத்தரப்பில் மூன்று புலனாய்வுப் பிரிவுகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பாதுக்காப்புத் தரப்பில் srilankaபிரதான மூன்று புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருந்தார். இந்த அறிக்கை பிரதமரின் இந்திய விஜியத்தினைத் தொடர்ந்து பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமரும், ஜனாதிபதியும் புலனாய்வுப் பிரிவுகளைக் கலைக்கத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளின் புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply