‘சார்க்’ செயற்கைகோள் திட்டத்துக்கு இலங்கை ஒப்புதல் ‘இஸ்ரோ’ தலைவர் தகவல்
‘சார்க்‘ நாடுகளின் பயன்பாட்டுக்காக, பிரத்யேக செயற்கைகோளை இந்தியா உருவாக்கி விண்ணில் செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த செயற்கைகோளை புவிசுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த உள்ள இடத்தை பதிவு செய்வதற்கு அனைத்து ‘சார்க்‘ நாடுகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை ஆகும். அந்தவகையில், இந்த திட்டத்துக்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவரும், விண்வெளித்துறை செயலாளருமான கிரண் குமார் நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும், ‘சார்க்‘ செயற்கைகோளை டிசம்பர் மாதத்துக்குள் ஏவிவிடலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுபோல், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம், பூடான் ஆகிய ‘சார்க்‘ நாடுகளின் ஒப்புதலுக்காக இந்தியா காத்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply