அமைதி திரும்ப வேண்டுமானால், அன்னிய படைகள் விலக வேண்டும்: ஆப்கான் அரசுக்கு தலீபான்கள் நிபந்தனை
‘ஒற்றைக்கண்’ முல்லா உமர் மரணம் அடைந்தது, கடந்த ஜூலை மாதம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக முல்லா மன்சூர் பொறுப்பேற்றுள்ளார். இவர் பக்ரித் பண்டிகையையொட்டி முதன் முதலாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:- நாட்டில் நமது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆப்கான் அரசு நிர்வாகம் விரும்பினால், ஆக்கிரமிப்பாளருடன் (அமெரிக்காவுடன்) அனைத்து பாதுகாப்பு உடன்பாடுகளையும் ரத்து செய்ய வேண்டும்.
அன்னிய படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும். ஆப்கான் ஆக்கிரமிப்பின் கீழ் இல்லை என்ற பட்சத்தில், நாட்டின் பிரச்சினையை உள்நாட்டில் புரிந்துணர்தல் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply