வடகிழக்கு நைஜீரியாவில் கொடூர தாக்குதல்: பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு
நைஜீரியாவில் மைதுகிரி நகரின் வட கிழக்கே நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதற்கு போகோ ஹராம் தீவிரவாதிகளே காரணம் என்று கூறப்படுகிறது.கொமாரி மற்றும் அஜிலாரி மாகாணங்களில் ஞாயிறு இரவு இந்தக் கொடூர குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களை விட மூன்று மடங்கு அதிகமான மக்கள் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். மைதுகிரி பயிற்சி மருத்துவமனையில் 72 பேரும், போர்னொ மாநில சிறப்பு மருத்துவமனையில் 45 பேரும் இறந்துள்ளதாக நைஜீரிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply