ஐ, நா, மனித உரிமைகள் ஆணையாளரின் போர் குற்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஸ

mahindaஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைக்கு அமைய வெளிநாட்டு நடுவர்கள் பங்குகொள்ளும் கலப்பு நீதிமன்றத்தினால் போர் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட கூடாது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தமது வரையறைக்கு அப்பால் சென்று செயற்பட்டதன் காரணமாகவே, தமது அரசாங்கம், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், 

 

புதிய அரசாங்கத்தின் வரவினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கையின் கடுமை குறைந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். எனினும் அதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதேவேளை, போர் குற்ற நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே உள்ளது. இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அந்த அதிகாரம் இல்லை எனவும்,

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் போர் குற்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply