இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணையில் இந்தியா திருத்தம்?
இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில், இந்திய அரசாங்கம் சில திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்த பிரேரணைக்கு முஐன்னதாகவே இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
ஆனாலும் இந்த பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் ஆதரவை தெரிவிக்கும் என்றும், இந்த பிரேரணையின் இறுதி வடிவம் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தியா திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஜெனீவாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கும் இந்தியா திருத்த யோசனைகளை முன்வைத்திருந்ததுடன், அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply