பிரதமரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முழு மனித சமூகமும் ஆன்மீக மற்றும் பௌதீகரீதியிலான வெற்றியை அடைந்துகொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் தன்னலம் மற்றும் பேராசை என்பவற்றிலிருந்து விடுபட்டு நாம் அனுபவிக்கும் சொத்துக்களிலிருந்து ஏனையோருக்கும் கொடுத்து சகவாழ்வு வாழ்வதற்குப் பழக வேண்டும். அத்துடன் சமூகத்தில் உயர்வு, தாழ்வு பேதங்களையும் ஒழித்தல் வேண்டும். அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையிலேயே வருடாந்தம் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
“ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி கிடையாது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இப்றாஹீம் நபியவர்கள் தனது மகனான இஸ்மாயீல் நபியவர்களை இறைவனுக்காக தியாகம் செய்ய முன்வந்தமையை எடுத்தியம்பும் இந்த வணக்கமானது இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமானதொரு வைபவமாகக் கருதப்படுகின்றது. உலகம் பூராவும் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலக சமாதானத்தின் பொருட்டு மதக் கிரியைகளில் ஈடுபடும் சர்வதேச மாநாடு என்ற ரீதியிலும் ஹஜ்ஜூப் பெருநாளானது உலக மக்கள் அனைவருக்கும் மாபெரும் முன்மாதிரியாக இருக்கின்றதென்பது எனது கருத்தாகும்.
மனிதாபிமானம் ஆட்சி செலுத்தும் யுகம் ஒன்றிற்காக இன பேதமின்றி சகலரும் ஐக்கியமாக நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கத்தில் இன்றைய தினம் ‘ஈதுல் அழ்ஹா’ ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சிகரமான பெருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply