மெக்கா நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள்

ஹஜ்751579ba-db58-4596-b6a1-604bf390908d_S_secvpf புனித யாத்திரை நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பயணம் இன்று தொடங்கியது. நேற்று ஹஜ் புனித வழிபாட்டிற்கு 20 லட்சம் பேர் மொத்தமாக குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை  725  ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 805 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

 

இதனிடையே, பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இதில் 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலையில், மூன்றாவதாக கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்திற்குட்பட்ட கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரும்,  நான்காவதாக தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்த்துக்கு அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிபி ஜான் என்கிற பெண்மனியும் பலியாகியிருப்பதாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியர்கள் 1.5 லட்சம் பேர் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நெரிசலில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply