சிரியா அமைதிப்பேச்சில் அதிபர் இடம் பெற வேண்டும்: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கருத்து
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. பல லட்சம் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அகதிகள் பிரச்சினை, ஐரோப்பிய நாடுகளுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. அதன் பின்னர் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “சிரியாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தாக வேண்டும். அமைதி ஏற்படுத்துவதற்காக அதிபர் பஷார் அல் ஆசாத்தையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து தரப்பினருடனும் நாங்கள் பேச இருக்கிறோம். அமெரிக்கா, ரஷியா மட்டுமல்ல, பிராந்திய கூட்டாளிகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற சன்னி நாடுகளுடனும் பேசுவோம்” என கூறினார்.
ஆனால் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயும் இதே கருத்தை கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply