அமெரிக்கவின் யோசனைக்கு இலங்கையும் அனுசரணை : பிரதமர்

RANILஇலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர் மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளும் பங்கேற்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ரணில் தெரிவித்தார்.

எனவே இந்த யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கமும் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply