ஐ.நா அறிக்கைக்கான நாடகம் ஆரம்பம் தமிழுருக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் ஞானசார தேரர்

THERARதேசிய அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் உள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன்களில் காட்டும் கரிசனையில் சிறு அளவு கூட பெரும்பான்மையினர் குறித்து சிந்திப்பதில்லை. இன்றைக்கு நல்லாட்சி, நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டு அமைச்சர்கள் கிறிஸ்தவ பாதிரிகளையும், இந்துக்குருக்களையும், முஸ்லிம் மௌலவிமாரையும் அழைத்து அமைச்சுக் காரியாலயங்களில் கூடிக்குலாவுகின்றனர். ஆனால் எங்களைக் கலந்து கொள்ளாமல் எந்தவொரு நல்லிணக்கமும் இந்த நாட்டில் சாத்தியப்படாது.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எங்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தால் நாங்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply