அமெரிக்காவின் தீர்மானம் ஓர் சர்வதேச சதி வலையாகும்?: தயான் ஜயதிலக்க
அமெரிக்காவின் தீர்மானம் ஒர் சர்வதேச சதி வலையாகும் முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜெனீவா அறிக்கைக்கு அமைய இலங்கையில் நிறுவப்பட உள்ள விசேட நீதிமன்றமானது, இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றியமைக்கும். இந்த யோசனைத் திட்டத்தை ஓர் சர்வதேச சதி வலையாகவே பார்க்க வேண்டும்.
ஹைபிரைட் என்ற சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும் வெளிநாட்டு நீதவான்கள் வெளிநாட்டு சட்டத்தரணிகள் விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையானது காலணித்துவ ஆட்சிக் காலத்திலான நீதிமன்றக் கட்டமைப்பினை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலையீடு பற்றியும் இரண்டாவது உத்தேச யோசனையில் கூறப்பட்டுள்ளதனால், இந்த யோசனை ஹைபிரைட் நீதிமன்றத்தை விடவும் ஆபத்தானது.
போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய விசாரணை என்ற போர்வையில் இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்க வைக்கும் சதி வலையில் ஏற்கனவே இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது என தயான் ஜயதிலக்க சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply