இலங்கையை சீர்குலைக்க சர்வதேச சமூகம் முயற்சி : விமல் வீரவங்ச
ஜெனீவா மனித உரிமைகள் யோசனைக்கு பின்னால் மறைந்து கொண்டு இலங்கையை சீர்குலைக்கும் தேவையே சர்வதேச சமூகத்திற்கும் உள்ளது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த செயற்பாடுகளுக்கு முன்நிற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததுடன் மேற்கத்தைய நாடுகளின் முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தற்போது அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் வகையில் தற்போதைய அரசு மீண்டும் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
வெள்ளையர்களின் நீதிமன்றம் மற்றும் தேசத்தின் பிழையான வழக்கு என்ற தொனிப் பொருளில் பத்தரமுல்லையில் இடம்பெற்ற சொற்பொழிவு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply