ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் இணையத்தளம்

ஐ.ம.சு முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான பிரதான வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்தவாறு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து இணையதளத்தை ஆரம்பிப்பதை செய்மதி ஊடாக பி.எம்.ஐ.சி.எச்சில் அமைக்கப்பட்டிருந்த திரையில் காணக்கூடியதாக இருந்தது.

இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி வீடியோ கொண்ப் ரண்ஸ் ஊடாக பி.எம்.ஐ.சி.எச்சில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் விசேட உரையாற்றினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கலந்து கொண்டார். இதேவேளை பி.எம்.ஐ.சி.எச்சில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட சமயத் தலைவர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் மேல் மாகாண தேர்தல் பிரசாரம் உட்பட தேர்தல்கள் தொடர்பான தகவல்கள் இந்த இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply