ஜெர்மனியின் முட்கம்பி வேலிகளை விற்கும் நிறுவனம், ஹங்கேரி அரசுடன் வியாபாரத்தில் ஈடுபட மறுத்த காரணம்!
முட்கம்பி வேலிகளை விற்கும் ஜெர்மனியின் நிறுவனம், தனக்கு கோடிக்கணக்கான லாபம் கிடைக்கும் என்று தெரிந்தும், ஹங்கேரி நாட்டு அரசுடன் வியாபாரத்தில் ஈடுபட மறுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் செர்பிய அரசைப் போன்றே, அதன் எல்லைக்கு அருகேயுள்ள ஹங்கேரி நாடும் தமது எல்லைப் பகுதியில் சுமார் 110 மைல் நீள முட்கம்பிகளை அமைக்கக் கோரி பெர்லின் நிறுவனம் ஒன்றை அணுகியது.
ஹங்கேரி அரசு, தமது அகதிகளை தடுக்கும் கொள்கைக்கு ஏற்ப, சிரிய அகதிகள் தமது நாட்டினுள் நுழைவதைத் தடுப்பதற்காக முட்கம்பி வேலிகளை (ரேசர் வயர் ஃபென்ஸ்) அமைக்க முடிவு செய்தது. இத்துறையில் புகழ்பெற்ற ஜெர்மனிய நிறுவனமான பெர்லினில் உள்ள ‘ம்யூடானோக்ஸ்’ நிறுவனத்தினை இதற்காக அணுகியது. எனினும், அதன் உரிமையாளர்கள் தாலாத் தேகர் மற்றும் முராத் எக்ரேக், சுமார் நாற்பது கோடி வருமானமுள்ள இந்த வியாபாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர்.
இந்த வியாபரத்தில் ஈடுபட மறுத்தது தொடர்பான காரணத்தை தாலத் கூறும்போது, ‘நாங்கள் இந்த முட்கம்பி வேலிகளை திருடர்கள் தப்பிக்காமல் இருப்பதற்காக வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றோம். ஆனால், இதற்கு மாறாக தமது தவறான நோக்கத்துக்காக, ஹங்கேரி அரசு இதை பயன்படுத்த எண்ணுகிறது. அகதிகள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதறியடித்து மற்ற நாடுகளுக்கு வருகின்றனர். அவர்களை, தமது நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க ஹங்கேரி அரசு இதனை உபயோக்கிக்க எண்ணுகின்றது. இது பார்ப்ட் வயர்(முள்வேலி) வேலிகளை விட ஆபத்தானது. உயிரை குடிக்கும் அளவு கூர்மையான கம்பிகளைக் கொண்டது’ எனவும் தெரிவித்தார்.
வருமானத்தை துச்சமென எண்ணி தம்மால் முடிந்த அளவு, அகதிகளை காப்பாற்றியுள்ள தாலத் மற்றும் முராத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது மனமுவந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply