பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடினின் வாகனம் மோதுண்டதனால் தீப்பற்றிக்கொள்ளவில்லை

wasimபிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடினின் வாகனம் மோதுண்டதனால் தீப்பற்றிக்கொள்ளவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. காரின் உலோகப்பகுதிகள் ஏதேனும் ஒன்றில் மோதுண்டு தீப்பற்றிக்கொள்ள வாய்ப்பு கிடையாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.ஜயவீர அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

 

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இது பற்றி அறிவித்துள்ளார். கார் எவ்வாறு தீப்பற்றிக்கொண்டது எவ்வாறு பரவியது என்பதனை நிர்ணயம் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி நீதவானின் உத்தரவிற்கு அமைய, கடந்த 25ம் திகதி விபத்துக்குள்ளான வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

அரசாங்கத்தின் மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க, டொயோடா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எல்.பெரேரா, உதவி இரசயான பகுப்பாய்வாளர் எல்.டபிள்யு. ஜயமான்ன ஆகியோரும் தம்முடன் இணைந்து வாகனத்தை சோதைனயிட்டதாகத் தெரிவித்துள்ளார். வாகனம் மோதுண்டதன் பின்னர் அதனை செலுத்தியிருக்க வாய்ப்பு கிடையாது.

 

விபத்தினால் வாகனத்தின் பவரின் கீழ் பகுதியும், இடதுபக்க முன்பக்க டயர் பகுதிக்குமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், சாரதிக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாகனத்தைச் சோதனையிட்டு ஆறு பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply