வர்ஷாவின் படுகொலை குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது : தினேஷ் குணவர்தனா
திருகோணமலையைச் சேர்ந்த சிறுமி வர்ஷாவின் படுகொலை குறித்த விசாரணைகள் இடை நிறுத்தப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார். வர்ஷா படுகொலைச் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கண்டு பிடித்த உயர் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்து எவ்வித கருத்தையும் அவர் வெளியிடவில்லை.
ஒரு காவல்துறை அதிகாரியின் இடமாற்றத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply