பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் அபிவிருத்தியைச் சுமூகமாக முன்னெடுக்கலாம் : அமைச்சர் டெனீஸ்வரன்
வடமாகாணத்தில் உள்ள அரச அலுவலக (உள்ளூராட்சி) பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பட்சத்தில் பிரதேச அபிவிருத்திகளை சுமூகமாக முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன். பதவி உயர்வு அற்ற 1999 நியமன வடமாகாண பட்டதாரி அரச அலுவலர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர், அங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது,
வடக்கில் உள்ள 34 அரசதுறை சார்ந்த திணைக்களங்களில் மாகாண சபைக்குட்பட்ட வகை யில் பட்டதாரி அரச அலுவலர்கள் பெரும் பங்கை பிரதேச வளர்ச்சி அபிவிருத்திக்காக முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களில் 16.5.1999 அன்று வடக்கில் நியமனம் பெற்ற உள்ளூராட்சி சபை சார்ந்த பட்டதாரி அரச அலுவலர்கள் 16 வருடங்களுக்கு மேல் பதவி உயர்வு இன்றி, சம்பள உயர்வு இன்றி நியமன தரத்தில் கடமையாற்றி வருகின்றனர்.
16 வருடங்களுக்கு மேல் பதவி உயர்வு அற்ற நிலையிலும் அவர்களது சேவை எமக்கு தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. அவர்களது பதவி உயர்வுக்கு ஏற்ற வகையில் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநரால் 16.05.1999 முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட சேவை பிரமாண குறிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன் இவர்களுக்கான பதவி உயர்வை வழங்குமாறு வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் முறையான கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை 16.5.1999 இல் வடக்கு,கிழக்கு மாகாணம் இணைந்திருந்த போது நியமனம் பெற்ற உள்ளூராட்சி சபை சார்ந்த கிழக்கு மாகாண பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு 16.5.2004 இல் வகுப்பு ஈஈ க்கும், 2014 இல் வகுப்பு ஈ க்கும் தரம் உயர்வு பெற்று கடமையாற்றி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் பார்வையிட்டுள்ளேன்.
ஆனால் வடமாகாண உள்ளூராட்சி சபை சார்ந்த அலுவலர்கள் வகுப்பு ஈஈ, ஈ க்கு உரிய தகை மைகளை பெற்றிருந்த போதிலும் அவர்கள் நியமனத் தரத்தில் உள்ளமை வேதனையளிக்கின் றது.
எனவே இந்த விடயம் தொடர் பில் வடமாகாண பிரதம செய லாளர், முதலமைச்சர் ஆகியோரின் விசேட கவனத்துக்கு விரைவில் சமர்ப்பித்து உரிய பதவி உயர்வை உரிய காலத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை சார்ந்த பட்டதாரிகளுக்கு வழங்க முன்வருவேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply